நடிகை திரிஷா குவாரண்டைன் காலத்தில் தனது முடியை வெட்டும் வீடியோவை ஜேஎஃப்டபில்யூ டிஜிட்டல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து சினிமா நடிகர் நடிகைகளும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளில் இருந்தபடி, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் வேடிக்கையா சேலஞ்ச் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் உடனான தொடர்பை புதுப்பித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா. குவாரண்டைன் காலத்தில் திரிஷா கிடைத்த வாய்ப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறுப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகை திரிஷா குவாரண்டைன் காலத்தில் தனது முடியை வெட்டும் வீடியோவை ஜேஎஃப்டபில்யூ டிஜிட்டல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடியோவில், நடிகை திரிஷா கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு தனது முடியை வெட்டடும்மா, வேண்டாமா ? என்று கேட்கிறார்.
திரிஷாவின் இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் ஏதோ தங்களுடைய முடியை வெட்டுவது போல நினைத்து ஃப்ளீஸ் வெட்ட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.திரிஷாவின் குவாரண்டைன் கால முடிவெட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.