• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

  • February 22, 2024 / 03:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் “மௌனம் பேசியதே, சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் 1 & 2, லியோ” போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், த்ரிஷா தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ‘கர்ஜனை, ராம், சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி, விடாமுயற்சி’ என 5 படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நேற்று முன் தினம் கொடுத்த பேட்டியில் “2017-ல் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்கள்” என்றும் குறிப்பாக “நடிகை த்ரிஷாவை தான் அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் கேட்டார். அவரை நடிகர் கருணாஸ் தான் பேசி அழைத்து வந்தார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டது” என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா உட்பட பல திரையுலக பிரபலங்கள் ஏ.வி.ராஜுவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். தற்போது, நடிகை த்ரிஷா தனது வக்கீல் மூலம் ஏ.வி.ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நோட்டீஸில் “ஏ.வி.ராஜு 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு டிவி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் வீடியோ வெளியிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

pic.twitter.com/DmRXHibIYx

— Trish (@trishtrashers) February 22, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #av raju
  • #trisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha :  அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Ghilli : ரீ-ரிலீஸாகும் விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Ghilli : ரீ-ரிலீஸாகும் விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version