திடீரென புகைப்படங்களை நீக்கிய திரிஷா காரணம் என்ன?

  • August 18, 2020 / 07:02 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பழைய புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா அவ்வப்போது புகைப்படங்களை தன் ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார். சமீபத்தில் சமூக வலைத்தளத்திலிருந்து பிரேக் எடுத்து, பின்பு மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த திரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை தவிர இதர புகைப்படங்கள் அனைத்தையும் மொத்தமாக நீக்கிவிட்டார்.

திரிஷாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாராவது ஹேக் செய்து விட்டார்களா என்று அவரது ரசிகர்கள் பதறிப்போய் இருக்கும் நிலையில் திரிஷா தனது ஸ்டோரியில் அவர்தான் புகைப்படங்களை நீக்கினார் என்றும், கணக்கில் இருக்கும் பழைய விஷயங்களை நீக்க முடிவு செய்துதான் டெலிட் செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் உள்ள மற்ற நடிகைகளைப் போல எந்த ஒரு பிராண்டிங்கையும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்யாத நடிகை திரிஷா தற்போது புகைப்படங்களை நீக்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ், மலையாளம் என்று படு பிஸியாக இருக்கும் நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக “ராம்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பரமபதம் விளையாட்டு படம் ஒன்றில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. இந்த படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus