தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இன்று மாலை வெளியிடப்பட்ட ‘நா ரெடி’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லியோ’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் எடுத்த ஸ்டில்லை வெளியிட்டதுடன், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.