3 நாட்களில் த்ரிஷாவின் ‘ராங்கி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 2, 2023 / 12:36 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் ‘கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன் 2, தி ரோட்’ என ஏழு படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ராங்கி’ படம் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்துக்கு முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, திரைக்கதை-வசனம் எழுதி ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன் இதனை இயக்கியுள்ளார்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சத்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் ரூ.78.79 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus