டிசம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகும் த்ரிஷாவின் ‘ராங்கி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • December 24, 2022 / 01:07 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இப்போது இவர் நடிப்பில் ‘கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன் 2, தி ரோட்’ என ஏழு படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ராங்கி’ படத்துக்கு முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, திரைக்கதை-வசனம் எழுதி ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன் இதனை இயக்கியுள்ளார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சத்யா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus