’96’ படத்தில் ‘ஜானு’வாக அசத்திய த்ரிஷா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 16, 2022 / 05:06 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஆரம்பத்தில் ‘ஜோடி’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே வந்து சென்றார். அதன் பிறகு ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் த்ரிஷா. இதில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் த்ரிஷா.

‘மௌனம் பேசியதே’ ஹிட்டிற்கு பிறகு த்ரிஷாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பரமபதம் விளையாட்டு’ என படங்கள் குவிந்தது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் த்ரிஷா. இப்போது த்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. த்ரிஷாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ’96’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பிரேம் குமார் இதனை இயக்கியிருந்தார்.

இதில் த்ரிஷா ‘ஜானு’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பகவதி பெருமாள், ஜனகராஜ், தேவதர்ஷினி, கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகை த்ரிஷா ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus