அடேங்கப்பா… 3 நாட்களில் த்ரிஷாவின் ‘தி ரோட்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • October 9, 2023 / 05:36 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் ‘கர்ஜனை, சுகர், ராம், லியோ, தி ரோட், சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி’ என ஏழு படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘தி ரோட்’ படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லக்ஷ்மிப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3.42 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus