“துக்ளக் தர்பார்” ஃபர்ஸ்ட் லுக் விரைவில்!

  • July 6, 2020 / 10:17 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “துக்ளக் தர்பார்”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tughlak darbar first look to be released soon

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் “நானும் ரவுடிதான்” படத்தில் இவருடன் நடித்த நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

https://twitter.com/VijaySethuOffl/status/1280115131360243714

“96” படத்தில் இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ள நிலையில், இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் இவர் வில்லனாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus