வெளியாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  • July 9, 2020 / 04:24 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “துக்ளக் தர்பார்”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான சில நிமிடங்களிலேயே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அதிதி ராவ் ஹைதாரி ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் “நானும் ரவுடிதான்” படத்தில் இவருடன் நடித்த நடிகர் பார்த்திபனும் இது இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“96” படத்தில் இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் இவர் வில்லனாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus