துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

  • August 3, 2020 / 09:59 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “துக்ளக் தர்பார்”.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே விஜய்சேதுபதி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுருந்ததைப் போல தற்போது துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “அண்ணாத்த செய்தி” கோவிந்த் வசந்தா இசையில் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய்சேதுபதி ரசிகர்களிடையே இந்த பாடல் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் மேலும் அதிதி ராவ் ஹைதாரி மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். டெல்லி பிரசாத் தீனதயாள் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப்படம் அரசியல் சார்ந்த கதையை கதைக்களமாக கொண்டிருக்கிறது என்பது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு சுமார் 35 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus