தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம்”.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “ரகிட ரகிட ரகிட” லிரிக் வீடியோவாக சமீபத்தில் வெளியாகி, தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. விவேக் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன், தனுஷ், தீ ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், கலையரசன் நடித்துள்ளார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்கிறார்.
இந்த படம் வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்றும், இந்த படத்தோடு அதர்வாவின் “குருதி ஆட்டம்” திரைப்படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.