நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .
அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி என்கிற படம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்தது . இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் உதயநிதி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்திலும் நடித்து முடித்து உள்ளார் .
சில மாதங்கள் முன் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று அவர் முடிவு எடுத்துள்ளார் . சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்த வந்த நிலையில் தற்போது அமைச்சர் பொறுப்பையும் ஏற்று உள்ளார். இந்நிலையில் மாண்புமிகு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் பேத்தி பூஜா-சிவம் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து கடிதத்தை வழங்கி அன்பை பகிர்ந்து கொண்டோம்.