சிம்புவின் படத்தை கைப்பற்றிய உதயநிதி !

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது . மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

 

இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது . இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எ.ஜி.எஸ் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

ஏற்கனவே சிம்புவின் மாநாடு படத்தை வாங்க முயன்றது குறிப்பிடத்தக்கது .

Share.