விக்ரம் வெற்றியை எதிர்பாத்திராத உதயநிதி!

  • June 19, 2022 / 10:38 PM IST

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூலை நிகழ்த்தி உள்ளது. நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்.

விக்ரம் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை தமிழ்நாட்டு ஷேர் மட்டும் 75 கோடியை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இந்த அளவுக்கு வசூல் பண்ணியது இல்லை.

மேலும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹட் கொடுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இன்னும் ஐந்து, ஆறு வாரங்களுக்கு விக்ரம் படத்தின் டிக்கெட் டிமாண்ட் உள்ளதாக என உதயநிதி கூறினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus