வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கர்ணன்’ படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி!

  • April 14, 2021 / 01:15 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வந்தார்.

மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லக்ஷ்மி ப்ரியா, லால், நட்டி, ஜி.எம்.குமார் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக நடிகரும், திமுக-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் “கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி.எஸ்.தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus