சைக்கோ படத்திற்கு உதயநிதி வாங்கிய சம்பளம் !

  • July 30, 2022 / 10:47 AM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .

சைக்கோ படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருந்தார் . இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . சைக்கோ படத்தில் நடிப்பதற்காக நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்று உள்ளார் .உதயநிதி தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் , மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகதலைவன் படத்திலும் நடித்து வருகிறார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus