கலக்கத்தில் “லியோ ” ! கெத்து காட்டும் உதயநிதி !

  • February 9, 2023 / 07:59 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார் .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து இருந்தார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 -ஆம் தேதி இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது . இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது .

ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தை இந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியிடலாம் என்ற முடிவை படக்குழு எடுத்து உள்ளது என்று கூறப்படுகிறது . இதற்கு காரணம் படத்தில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை அதனால் தள்ளி போகிறது என்று கூறினாலும் இதற்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் உள்ளார் என்று கூறப்படுகிறது .

பொன்னியின் செல்வன் 2 படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் தான் விநியோகிக்க உள்ளது . ஏற்கனவே துணிவு படத்தை உதயநிதி விஜய் நடித்த வாரிசு படத்துடன் மோத விட்டார் . தற்போது அதே யுக்தியை மீண்டும் கையில் எடுத்து உள்ளார் . அதாவது ஆயுத பூஜை நாட்களில் 6 நாள் விடுமுறை இருக்கிறது இதை குறி வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அவரது 5வது படமான லியோ படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் லலித் அறிவித்து இருந்தார் .

தற்போது உதயநிதி விஜய் நடிக்கும் லியோ படத்துடன் அதே தேதியில் பொன்னியின் செல்வன் 2 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் . ஏற்கனவே துணிவு படத்தை வாரிசு படத்துடன் மோதவிட்டு விஜய்யின் பாஸ் ஆபீஸ் வசூலுக்கு முட்டுக்கட்டை போட்ட உதயநிதி இந்த முறை மீண்டும் விஜய் படத்துடன் மோத முடிவு செய்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus