Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ஐ பார்த்துட்டு உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?
January 13, 2024 / 11:41 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘கேப்டன் மில்லர்’ படம் நேற்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தற்போது, இப்படத்தை பார்த்து ரசித்த தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து #CaptainMiller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் @dhanushkraja, திரு.@NimmaShivanna, இயக்குனர் #ArunMadheswaran, இசை அமைப்பாளர் சகோதரர் @gvprakash, @SathyaJyothi, @priyankaamohan, சண்டை பயிற்சியாளர் @dhilipaction உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்று பதிவிட்டுள்ளார்.