“கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி”… உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்!

  • May 13, 2021 / 12:34 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நடிகரும், திமுக-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். கடந்த மே 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளி வந்தது. உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றார்.

தற்போது, நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன். கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள். நன்றி” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus