அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • July 5, 2023 / 04:08 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாமன்னன்’. இப்படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.46.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus