உதயநிதி – வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’-ஐ பார்த்து ரசித்த தனுஷ்… வெளியானது முதல் விமர்சனம்!

  • June 28, 2023 / 08:35 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை நாளை (ஜூன் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல நடிகர் தனுஷ் ட்விட்டரில் இப்படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus