அதிக லைக்ஸ் குவிக்கும் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல்!

  • May 19, 2023 / 09:15 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். தற்போது, இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘ராசா கண்ணு’வை ரிலீஸ் செய்துள்ளனர். வடிவேலு பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus