உதயநிதி – வடிவேலு – ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘மாமன்னன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • June 2, 2023 / 02:53 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. தற்போது, இந்த படத்தை வருகிற ஜூன் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus