தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஜூன் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.