உதயநிதி – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கலகத் தலைவன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • November 9, 2022 / 12:07 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது இவர் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே, மாமன்னன், கலகத் தலைவன்’ மற்றும் நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கலகத் தலைவன்’ படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இதற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரெல்லி இசையமைத்துள்ளனர்.

இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, படத்தை வருகிற நவம்பர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus