அடேங்கப்பா… உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ முதல் நாள் வசூல் இவ்ளோவா?

  • March 18, 2023 / 03:21 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே, மாமன்னன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் நேற்று (மார்ச் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், பூமிகா, வசுந்தரா காஷ்யப், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ.கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இதனை ‘லிபி சினி கிராஃப்ட்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus