‘பிக் பாஸ் 4’ : “எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது”… கதறி அழுத அனிதா!

  • December 28, 2020 / 01:06 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கமலிடம் ஆரி “நிறைய பேரை நம்ம சந்திச்சிருக்கோம் சார். பேசும்போதே ஒரு பேச்சு சுதந்திரம் இல்லன்னு feel பண்ணது எனக்கு அனிதாகிட்ட மட்டும் தான் சார்” என்று சொல்கிறார். அதற்கு கமல் “பார்த்தேன் அது இந்தவாட்டி பயங்கர சூடாயிட்டாங்க” என்று சொல்கிறார்.

பின், அனிதா சம்பத் “சார் என்னோட family-ல பெரிய weakness” என்று பேசிக் கொண்டிருக்கையில் கமல் “இருங்க இருங்க நான் உங்களுக்காக பேச போறேன். வேண்டாம்னா நீங்களே பேசிடுங்க” என்று சொல்கிறார். அதற்கு அனிதா “இல்ல சார்” என்று சொல்கிறார். பின், கமல் “ஆரிக்கு ஒரு பரிசு கொடுத்தீங்க அனிதா” என்று சொல்கிறார். அதற்கு அனிதா “எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஏன்னா எனக்கு general-ஆ ஆரியை ரொம்ப பிடிக்கும். நான் எப்பவும் wanted-ஆ அவரை hurt பண்ணனும்னு நினைக்க மாட்டேன். and sorry ஆரி” என்று அழுது கொண்டே சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.