மீண்டும் ட்விஸ்ட் வைக்கும் கமல் !

  • February 15, 2023 / 06:35 PM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது . தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிகர் கமல் கூட்டணியில் உருவாகும் படம் தான் முதலில் தொடங்க இருக்கிறது என்று கூறப்படுகிறது . இந்த படம் 35-40 நாட்களில் ஒரே அட்டவணையில் படம்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus