நடிகர் அஜித்தை குறி வைக்கும் சன் பிக்சர்ஸ் !

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் .இந்த நிறுவனம் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து படம் தயாரித்து வருகிறது . அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்கிற படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டது .
இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இதற்கு பின் நடிகர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை கடந்த மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது . இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியானது அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் படத்தையும் , விஜய் சேதுபதியை வைத்து அவரது 46-வது படத்தையும் தயாரித்து வருகிறது . இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் நடித்தார் அஜித் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார் . இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தந்து 62-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க உள்ளார் . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் அஜித் இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்தது இல்லை அதே சமயம் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து விமர்சன ரீதியாக தோல்வி படங்களை கொடுத்து வருகிறது . எனவே சிறுத்தை சிவா இயக்க இருக்கும் அஜித் படம் தோல்வி பாதையில் இருந்து வெற்றி பாதைக்கு அழைத்து செல்லுமா இல்லையா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

Share.