புதுப்பேட்டையும் இல்ல , ஆயிரத்தில் ஒருவனும் இல்ல , செல்வராகவன் எடுத்த அதிரடி முடிவு !

  • January 20, 2023 / 05:03 PM IST

2004 ஆம் ஆண்டு வெளியான காதல் நாடகத் திரைப்படம் 7G ரெயின்போ காலனி . இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது .இதில் அறிமுக நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்து இருந்தனர் . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு இருந்தார் . ஒரு பையனுக்கு ஒரு பெண்ணின் மீதுள்ள காதலை வித்தியாசமான கோணத்தில் இயக்குநர் செல்வராகவன் படமாக எதுத்து இருந்தார் .

15 அக்டோபர் 2004 இல் வெளியிடப்பட்டது, இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.மேலும் ரவி கிருஷ்ணாவின் நடிப்பிற்காக பிலிம்பேரின் சிறந்த ஆண் அறிமுக விருதைப் பெற்றார், அதே நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் 7G ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . A.M .ரத்னம் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் மேலும் 7G ரெயின்போ காலனி படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா இந்த பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus