ஷிவின் மற்றும் கதிரவன் இடையே மோதல் !

  • January 9, 2023 / 08:20 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 90 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . கடந்த வாரம் இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ரட்சித்தா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் அஸிமை அனைவரும் நாமினேட் செய்துள்ளனர் . மேலும் முதல் முறையாக கதிரவன் ஷிவினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இதனால் ரசிகர்கள் பலரும் இன்றைய எபிசோடை காண ஆர்வமாக உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus