மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

  • January 28, 2023 / 08:50 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து இருந்தது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இரண்டு வாரம் கடந்தும் இந்த படம் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது . இது நடிகர் அஜித்தின் 62-வது படம் . இந்நிலையில் தற்போது
அஜித் 63 படத்தை பற்றின தகவல் தீயாய் பரவி வருகிறது . இயக்குநர் அட்லீ இயக்கும் இந்த படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்றும் , ஏ.ஆர் .ரகுமான் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது .

நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகரான அட்லீ நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி தமிழ் சினிமாவில் பலருக்கும் எதிர்பாராத செய்தியாக பார்க்கப்படுகிறது

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus