விக்ரமனிடம் கருத்துவேறுபாடு கொண்ட போட்டியாளர் அதிரடி வெளியேற்றம்!

  • January 3, 2023 / 12:23 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

 

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் அமுதவாணன் .

இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடந்து வந்தது . ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் இது தான் . போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த டாஸ்கில் பங்கேற்றனர் . இரண்டு தினங்களுக்கு முன் இந்த டாஸ்க் நிறைவுப்பெற்றது .

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் மணிகண்டன் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

 

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus