இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா ?

  • December 16, 2022 / 08:28 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைக்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ” இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போல பீல் குட் கொண்ட படம் தான். ஆனால், இந்தியன் 2 படத்தின் கதை கொஞ்சம் பின்னால் போகும், அதாவது சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக நடந்த கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. சொல்லப் போனால் இந்தியன் தாத்தா என்ற சேனாதிபதிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் அப்பா வருவார் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus