ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குநர் !

  • February 16, 2023 / 05:26 PM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

மோகன் லால் , ஷிவ்ராஜ் குமார் , ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் .சமீபத்தில் ஜாக்கி ஷெரீப் ஜெயிலர் படத்தில் இணைந்தார் .

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அப்டேட் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருக்கிறது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது !

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus