பிக் பாஸ் 6 இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா ?

  • January 7, 2023 / 09:27 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 85 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் ஏ.டி.கே . மேலும் நாமினேஷன் ப்ரீ பாசை அஸிம் வென்றுள்ளார் . இதனால் இந்த வாரம் வீட்டார் இவரை நாமினேட் செய்ய முடியாது .

இது ஒரு பக்கம் இருக்க இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதி போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர் ரட்சித்தா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது . இதனால் அவரது ரசிகர்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus