நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . இதனால் அவருக்கு மருத்துவர் ஒரு வாரம் நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளி தினம் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது . நடிகர் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி என்கிற பாடலை இசையமைப்பாளர் தமன் ரீமேக் செய்து உள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது . இதனால் தற்போது இந்த பாடலின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .
இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வாரிசு படத்தை விளம்பர படுத்தும் வகையில் துபாயில் ஒரு நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்றும் அதில் நடிகர் விஜய் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .
இந்நிலையில் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் வாங்கி இருந்தார் . ஆனால் தற்போது இவர் அவரது பேனரில் உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிடுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது . இதற்கான ஆவணங்கள் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது . நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு படத்தையும் உதயநிதி தான் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் உதயநிதிக்கு டபுள் ஜாக்பாட் அடித்துள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.