பிக் பாஸ் இந்த வாரம் எலிமினேஷன் யார் தெரியுமா !

  • November 21, 2022 / 12:03 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக மணிகண்டன் செயல்பட்டார் . மேலும் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது . ராஜா மற்றும் ராணியாக முறையே ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரஷிதா இருந்தனர் . தளபதியாக அசீம் , ராஜா குருவாக விக்ரமன் விளையாடினார் . மீதும் உள்ள போட்டியாளர்கள் காவலர்கள் மற்றும் பொது மக்களாக விளையாடி இருந்தனர் . இந்த வார சிறந்த போட்டியாளர்களாக மைனா , தனலட்சுமி , கதிரவன் தேர்வு செய்யப்பட்டனர் .

இந்நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் நிவாஷினி இருவரும் குறைந்த வாக்குகளை பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது . இந்நிலையில் நிவாஷினி இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போக அதிக வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus