சினிமாவில் பாப்புலர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கே.வி.ஆனந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அப்போது, அவரது மறைவு குறித்து பிரபல நடிகர் சிலம்பரசன் வெளியிட்டிருந்த அறிக்கையில் “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். ‘கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தற்போது, சிலம்பரசனை வைத்து ‘கோ’ படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. சிலம்பரசன் இப்படத்தில் நடிக்க மறுத்த பிறகு, அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஜீவா நடித்தார். ஜீவாவுக்கு ஜோடியாக கார்த்திகா நடித்தார். மெகா ஹிட்டான இந்த படம் நடிகர் ஜீவாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
1
2
Unseen working stills of Thalaivan @SilambarasanTR_ in late K.V Anand ‘s directional film which was shelved & later released as #KO !#SilambarasanTR #Maanaadu pic.twitter.com/ffv9p2bixD
— SilambarasanTR 360° (@STR_360) May 12, 2021