உபேந்திரா – சுதீப் – ஷிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ள ‘கப்ஜா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 17, 2023 / 02:07 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கப்ஜா’. இந்த படம் இன்று (மார்ச் 17-ஆம் தேதி) கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.சந்துரு இயக்கியுள்ளார். இதில் உபேந்திராவுடன் இணைந்து முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், ஷிவராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார், ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ்.எஸ்.ரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus