உபேந்திரா – சுதீப் – ஷிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ள ‘கப்ஜா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • March 6, 2023 / 10:39 AM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கப்ஜா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.சந்துரு இயக்கியுள்ளார்.

இதில் உபேந்திராவுடன் இணைந்து முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், ஷிவராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார், ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ்.எஸ்.ரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இன்று இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மார்ச் 17-ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus