“நான் நலமாக இருக்கிறேன்”… தனது உடல்நிலை குறித்து நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோ!

  • November 25, 2022 / 07:56 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் தமிழில் ‘சத்யம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோவாக விஷால் நடிக்க, இதனை ஏ.ராஜசேகர் இயக்கியிருந்தார்.

இப்போது உபேந்திரா நடிப்பில் ‘கப்ஜா, UI’ உட்பட நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘UI’ படத்தை உபேந்திராவே இயக்கி வருகிறார். இப்படம் கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகுமாம்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் ஷூட்டிங்கில் உபேந்திரா கலந்து கொண்டபோது திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவியதால், உபேந்திராவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, உபேந்திரா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் “ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு எனக்கு ஒன்றும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். இப்போது மீண்டும் ‘UI’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus