அடேங்கப்பா… 3 நாட்களில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • March 20, 2023 / 05:57 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘கப்ஜா’ கடந்த மார்ச் 17-ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.சந்துரு இயக்கியுள்ளார். இதில் உபேந்திராவுடன் இணைந்து முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், ஷிவராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார், ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ்.எஸ்.ரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.20.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus