கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் தமிழில் ‘சத்யம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோவாக விஷால் நடிக்க, இதனை ஏ.ராஜசேகர் இயக்கியிருந்தார்.
இப்போது உபேந்திரா ‘UI’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இவரே இயக்கியும் வருகிறார். இப்படம் கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி வருகிறது.
இதில் ரீஷ்மா நானய்யா, சன்னி லியோன், முரளி ஷர்மா, இந்திரஜித் லங்கேஷ், நிதி சுப்பையா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.