தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் குமார். முதல் படமே பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘உறியடி’. விஜய் குமாரே நடித்து, இயக்கியிருந்த இந்த படத்தின் சக்சஸ் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கியது.
‘உறியடி’ பார்ட் 2 டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தயாரித்து, வெளியிட்டார். அதன் காரணமாக சூர்யா, பெண் இயக்குநர் சுதா கொங்கரா காம்போவில் உருவாகி கடந்த நவம்பர் மாதம் ரிலீஸான ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருந்தார் விஜய் குமார். சமீபத்தில், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் குமார் ஒப்பந்தமானார்.
தற்போது, விஜய் குமார் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்க உள்ளார். இவர் ‘உறியடி 1 & 2’வில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இப்படத்தினை ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரிக்க உள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.
Excited to announce REEL GOOD FILM’s debut production starring #Uriyadi @Vijay_B_Kumar in a youth action-drama. The film ll be directed by @Abbas_A_Rahmath (Asst. director Uriyadi 1&2). We hv begun pre-production work & are in the process of finalizing rest of the cast and crew. pic.twitter.com/Ia8dCMKknV
— REEL GOOD FILMS (@reel_good_films) December 10, 2020