மாட்டிக்கொண்டு முழிக்கும் மைனா !

  • January 11, 2023 / 06:38 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 90 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . கடந்த வாரம் இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ரட்சித்தா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் பிரபல தொகுப்பாளினிகளான விஜே பார்வதி & விஜே ஷோபனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்த போட்டியில் பங்கேற்று உள்ளனர் . எப்போதும் பரபரப்பாக இருக்கும் பிக் பாஸ் வீடு இவர்கள் வருகையால் தற்போது கலகல வென்று மாறியுள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் மைனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தாக்குகிறார் வி ஜே பார்வதி . இதனால் இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்து உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus