அடேங்கப்பா …. 17 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

  • January 31, 2023 / 03:35 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . ஆரம்பித்தில் நல்ல வசூலை பெற்று வந்த வாரிசு படம் படிப்படியாக வசூலில் குறைந்து வருகிறது . இதற்கு காரணம் வாரிசு படம் பெற்ற எதிர்மறை விமர்சனம் தான் என்று கூறப்படுகிறது .

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 14 -ஆம் தேதி தெலுங்கில் வாரசுடு என்கிற தலைப்பில் வெளியானது . தெலுங்கிலும் கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது . இந்நிலையில் தெலுங்கில் விஜய் நடித்த வாரசுடு படம் 17 நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தோராயமாக 29.52 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus