அடேங்கப்பா …. 4 நாட்களில் வாரிசு தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

  • January 19, 2023 / 04:32 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . ஆரம்பித்தில் நல்ல வசூலை பெற்று வந்த வாரிசு படம் படிப்படியாக வசூலில் குறைந்து வருகிறது . இதற்கு காரணம் வாரிசு படம் பெற்ற எதிர்மறை விமர்சனம் தான் என்று கூறப்படுகிறது .

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 14 -ஆம் தேதி தெலுங்கில் வாரசுடு என்கிற தலைப்பில் வெளியானது . தெலுங்கிலும் கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது . இந்நிலையில் தெலுங்கில் விஜய் நடித்த வாரசுடு படம் 4 நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 20.25 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus