வடசென்னை 2 பற்றி வெற்றிமாறன் கொடுத்த புதிய அப்டேட் !

  • August 1, 2022 / 01:30 PM IST

அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை முதலில் குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்து இருந்தார் . ஆனால் பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை . இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . வெற்றிமாறன் மற்றும் இளையராஜா இணையும் முதல் படமாக இந்த படம் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு எழுந்துள்ளது .

விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க இருக்கிற படம் வாடிவாசல் . நடிகர் சூர்யா இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் சமீபத்தில் நடந்த திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படம் வட சென்னை 2 என்று உறுதியாக சொல்லி உள்ளார் .இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.